முன்பதிவு மையம்
தகவல்
விதிமுறைகள்
முன்பதிவு மையங்கள்
சிறப்பு சேவைகள்
தீபாவளி பண்டிகை
 
  வீடு > தீபாவளி பண்டிகை
  பொங்கல் பண்டிகை 2022 சென்னையில் இருந்து பேருந்து இயக்கம்
பொங்கல்-2022 திருநாளை முன்னிட்டு சென்னையிலிருந்து கீழ்க்கண்ட ஐந்து இடங்களிலிருந்து பேருந்துகள் புறப்படும் (11/01/2022 முதல் 13/01/2022 வரை).

பேருந்து நிலைய மாற்றம்

 • மாதவரம் புதிய பேருந்து நிலையம்.
  பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.

 • கே.கே. நகர் மா.ந,போ.கழக பேருந்து நிலையம்.
  ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

 • தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்துநிலையம் (MEPZ).
  திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.

 • தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்.
  திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

 • பூந்தமல்லி பேருந்து நிலையம்.
  வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் காஞ்சிபுரம் , செய்யாறு , ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி செல்லும் பேருந்துகள்.

 • புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேடு.
  மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை , திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு , ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர்.)

வழித்தட மாற்றம்

  அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, அவுட்டர் ரிங்ரோடு வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  முன்பதிவு சிறப்பு மையங்கள் செயல்படும் நாட்கள் (11/01/2022 முதல் 13/01/2022 வரை) (காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை)


For enquiry and complaints OTRS Tollfree Number: 9513948001 may be contacted.

© TNSTC. All Rights Reserved.