முன்பதிவு மையம்
தகவல்
விதிமுறைகள்
முன்பதிவு மையங்கள்
சிறப்பு சேவைகள்
 
  முகப்பு > விதிமுறைகள்
   விதிமுறைகள்
 
விதிமுறைகள் / இட ஒதுக்கீடு விதிகள்
  1. கழக விதிகளுக்கு உட்பட்டு 30 நாட்கள் முன்பே முன்பதிவு செய்யப்படும் .
  2. முன்பதிவு மைய வேலை நேரம் காலை 06:00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை செயல்படும்.* முன்பதிவு மையங்களின் வேலை நேரம் இடத்திற்கு இடம் மாறுபடலாம்.
  3. 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைக்கு அரை கட்டணத்திற்கு தகுதியானவர்கள். 130 செ.மீ உயரத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயணத்தின் போது அசல் வயது சான்றிதழ் காண்பிக்கப்படவேண்டும். இல்லையென்றால் முழு கட்டணம் வசூலிக்கப்படும்.
  4. முன்பதிவு செய்யப்பட்ட பயண சீட்டை மாற்றத்தக்கவை அல்ல.
  5. ரயில்வே நேரம் பின்பற்றப்படுகிறது.
  6. தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக முன்பதிவு செய்த பேருந்துக்கு பதிலாக மாற்றுப் பேருந்து இயக்கம் போது பேருந்து வகையும் முன்பதிவு செய்த இருக்கை மாற்றத்தக்கது / மாற்றத்திற்குரியது.
  7. முன்பதிவு சலுகைக் கட்டணம் அடிப்படை கட்டணத்தில் மட்டுமே வழங்கப்படும்.
  8. முன்பதிவு செய்த பயணிகள் பேருந்து புறப்படும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக நடத்துனர் அல்லது நேர காப்பாளர் அலுவலரை தொடர்பு கொள்ளவும்.
  9. பயணிகள் மின்னனு பயணசீட்டு / கையடக்க தொலைபேசி (மொபைல்) பயணசீட்டு உடன் பயணம் செய்கிறார்களானால், அவர் பயணத்தின் போது ' மின்னனு பயணசீட்டு / கையடக்க தொலைபேசி (மொபைல்) பயணசீட்டு' குறிப்பிடப்பட்டுள்ள அசல் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் .
  10. tnstc.in இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புறப்படும் நேரம், இயங்கும் நேரம் மற்றும் வருகை நேரம் ஆகியவை நிலையான இயக்க நிலைக்கு உட்பட்டது. சாலைத் தடை, போக்குவரத்து நிலை, இயற்கைப் பேரிடர் மற்றும் வேறு தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக இந்த நேரங்கள் மாறுபடலாம்.
குழு தள்ளுபடி:

குழு முன்பதிவு தள்ளுபடி - ஒரே டிக்கெட்டில் குழுவாக 10 அல்லது அதற்கு மேற்பட்ட இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது அடிப்படை கட்டணத்தில் 10% தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.
* திருவிழா மற்றும் மங்களகரமான பயண நாட்களில் குழு தள்ளுபடி பொருந்தாது.
* பகுதியளவு ரத்து செய்யப்பட்டால், ரத்து செய்யப்பட்ட பிறகு பயணிகளின் எண்ணிக்கை 10க்கும் குறைவாக இருந்தால், அனைத்து இருக்கைகளுக்கும் குழு தள்ளுபடி திரும்பப் பெறப்படும்.

மாற்று திறனாளி நபர்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள்:

இணையதள பயணச்சீட்டுமுன்பதிவு செய்யும் போது மாற்று திறனாளி நபர்கள் தங்களது அடையாள அட்டையின்
(அரசு வழங்கியது,) விவரங்களைக் குறிப்பிட வேண்டும். மேலும் பயணத்தின் போது தங்களது அடையாள அட்டையின் (அரசு வழங்கியது,) சான்றிதழின் ஒரு நகலை நடத்துனரிடம் ஒப்படைக்க வேண்டும், மற்றும் அசல் சான்றிதழை மாற்று திறனாளி கொண்ட நபரால் நடத்துனருக்குக் காட்ட வேண்டும். பாதுகாவலர்கள் மாற்று திறன் கொண்ட நபருடன் வந்தால், அத்தகைய பாதுகாவலரின் அடையாள அட்டை ஆதாரம் நடத்துனருக்கும் சமர்ப்பிக்க அல்லது காண்பிக்க வேண்டும்.
* மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை தமிழ்நாட்டிற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

மூத்த குடிமக்கள்:

பேருந்தில் ஏறும் போது, வயது முதிர்விற்கான புகைப்பட அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், மேலும் பான் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், ரேஷன் அட்டை , அரசால் வழங்கிய புகைப்பட அடையாள அட்டை போன்ற அசல் வயது சான்று இவைகளில் ஏதேனும் ஒன்று காண்பிக்க வேண்டும்.

மின்னனு பயணசீட்டு மற்றும் கையடக்க தொலைபேசி பயணசீட்டுகள் தொடர்பாக பணத்தைத் திரும்பப் பெறுதல்
பேருந்து புறப்படும் இடத்திலிருந்து புறப்படும்
நேரத்தின் 48 மணி நேரத்திற்கு முன்.
10 % கட்டணம் குறைப்பு
பேருந்து புறப்படும் இடத்திலிருந்து புறப்படும்
நேரத்தின் 24 மணி முதல் 48 மணி வரை.
20 % கட்டணம் குறைப்பு
பேருந்து புறப்படும் இடத்திலிருந்து புறப்படும் நேரத்தின் 60 25 % கட்டணம் குறைப்பு
முன்பதிவு கட்டணம் மற்றும் பிற பொருந்தக்கூடிய கட்டணங்கள் எந்த சூழ்நிலையிலும் திருப்பித் தரப்படாது.

பேருந்து புறப்படும் இடத்திலிருந்து புறப்படுவதற்கு ஒரு (1) மணி நேரத்திற்கு முன்பு மட்டும் மின்னனு பயணசீட்டு / கையடக்க தொலைபேசி பயணசீட்டு ரத்து செய்ய அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகு ரத்து செய்ய அனுமதிக்கப்படாது.பயணத்தேதி அன்று இரவு 9 மணிக்கு முன்பு வரை மட்டும் ரத்து செய்ய அனுமதிக்கப்படும் அதன் பிறகு அன்று இரவு 10 மணிக்குப் மேல், அடுத்த நாள் காலை 7 மணி வரை ரத்து செய்ய முடியாது.

  1. மின்னனு பயணசீட்டு / கையடக்க தொலைபேசி பயணசீட்டு திரும்பளிக்கும் தொகை பயணியின் குறிப்பிட்ட வங்கி கணக்கு மற்றும் கடன் அட்டை கணக்கில் 14 வங்கி வேலை நாட்களுக்குள் திருப்பித் தரப்படும்.
  2. வாடிக்கையாளர் கணக்கிற்கு தொகையை மாற்றுவதற்கான நேரம் சம்பந்தப்பட்ட வங்கியின் கொள்கையைப் பொறுத்தது. வங்கியின் தாமதத்திற்கு SETC பொறுப்பல்ல.
  3. செயல்பாட்டு காரணங்களுக்காக பேருந்து சேவையை கழகத்தால் ரத்து செய்தால், பயணியின் பணத்தைத் திரும்பப்பெறும் உரிமைகோரல் கடிதத்தைப் பெற்ற பின்னரே சம்பந்தப்பட்ட கடன் அட்டை / வங்கி கணக்கில் பணத்தை வழங்கப்படும்.
  4. முன்பதிவு செய்யும்போது இருக்கை / பயணசீட்டு உறுதி செய்யப்படாத நேரங்களில் பிடிக்கப்பட்ட தொகையை தங்கள் வங்கி / கணக்கு அட்டைக்கு 15 வேலை நாட்களுக்குள் வரவு வைக்கப்படும். 15 வேலை நாட்களில் இந்த தொகை வரவு வைக்கப்படாவிட்டால், தயவுசெய்து உங்கள் முகவரி மற்றும் பரிவர்த்தனையின் முன்பதிவு குறிப்பு எண்ணை (OB எண்) மேற்கோள் காட்டி, கீழேயுள்ள முகவரியில் வணிக மேலாளருக்கு பணத்தைத் திரும்பப்பெறும் கோரிக்கை கடிதத்தை அனுப்பவும்.
  5. வங்கி தரப்பில் இருந்து பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் ஏற்படும் காலதாமத்திற்கு SETC பொறுப்பேற்காது.
  6. தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக கழகத்தால் எந்தவொரு சேவையும் ரத்துசெய்யப்பட்டால் மற்றும் ரத்து செய்யப்பட்ட சேவைகளுக்குப் பதிலாக மாற்று சேவை எதுவும் இயக்கப்படவில்லை என்றால், அந்த குறிப்பிட்ட சேவையில் ஒதுக்கப்பட்ட பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறலாம் (பொருந்தக்கூடிய சேவைக் கட்டணத்தைக் கழித்த பிறகு) பணத்தைத் திரும்பப்பெறுதல் கோரிக்கை கடிதம் உடன் அசல் பயணசீட்டை இணைத்து பின்வரும் முகவரிக்கு பயணத்தேதியில் இருந்து 25 (இருபத்தைந்து) நாட்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

துணை மேலாளர் (வணிகம்)
அரசு விரைவு போக்குவரத்துக்குக் கழகம் தமிழ்நாடு லிமிடெட்.,
தலைமை அலுவலகம், திருவள்ளுவர் இல்லம்
பல்லவன் சாலை
சென்னை - 600002.

வங்கி தொலைபேசி எண் (முன்பதிவு சம்பந்தமாக மட்டும்) :
044-49076326 / 49076316. pgsupport@billdesk.com
தொலைபேசி எண் (முன்பதிவு சம்பந்தமாக மட்டும்) : 9513508001

 
© TNSTC. All Rights Reserved.        
மையம்:
www.radiantinfo.com